பணியில் இருந்து ஓய்வு டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் கண்ணீருடன் விடை பெற்றார்


பணியில் இருந்து ஓய்வு டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் கண்ணீருடன் விடை பெற்றார்
x
தினத்தந்தி 1 Aug 2017 5:15 AM IST (Updated: 1 Aug 2017 1:50 AM IST)
t-max-icont-min-icon

தமிழக சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. கே.ராதாகிருஷ்ணன் நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

சென்னை,

தமிழக சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. கே.ராதாகிருஷ்ணன் நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாலை வழிஅனுப்பு விழா நடந்தது. டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன், தனது மனைவி ராஜேஸ்வரியுடன் விழாவில் கலந்து கொண்டார். விழாவில், நடந்த போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ராதாகிருஷ்ணன் ஏற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக சட்டம்-ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.

தமிழக மின்சார வாரிய லஞ்ச ஒழிப்பு, கண்காணிப்பு தலைமை அதிகாரி டி.ஜி.பி. மகேந்திரன், சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர். தமிழக காவல்துறை சவாலான பல்வேறு காலகட்டங்களில் சிறப்பாக பணியாற்றி உள்ளது என்றும், தொழில்நுட்ப பிரிவில் வருங்காலத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும், டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் கண்ணீர் மல்க பேசி விடை பெற்றார். 

Next Story