பூசாரிகள் முழுமனதுடன் பூஜை நடத்தினால் இறைவனின் அருளாசி கிடைக்கும்
பூசாரிகள் முழுமனதுடன் பூஜை நடத்தினால் இறைவனின் அருளாசி கிடைக்கும் என்று 250 கிராம கோவில் பூசாரிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் சக்தி அம்மா கூறினார்.
வேலூர்,
வேலூர் அருகேயுள்ள ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் 25-வது வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு ஜோதிஸ்வரூபிணி திட்டத்தின் கீழ் 250 கிராம கோவில் பூசாரிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தருமையாதீனம் மாசிலாமணி தேசிகஞானசம்பந்த சுவாமிகள் தலைமை தாங்கினார். ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், மாநில நுகர்வோர் குறைதீர்வு ஆணைய தலைவர் நீதிபதி தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் 250 கிராம கோவில் பூசாரிகளுக்கு சக்தி அம்மா பரிசுப்பொருட்கள் வழங்கி பேசியதாவது:-
தமிழகத்தில் பொதுப்பணித்துறை, வருவாய்துறை உள்பட பல்வேறு துறைகள் உள்ளன. இந்த துறைகளில் உள்ளவர்கள் பொருளாதார ரீதியாக சிறந்த நிலையில் காணப்படுகின்றனர். ஆனால் ஆன்மிக துறையில் காணப்படும் பூசாரிகளின் நிலைமை சொல்லி கொள்ளும் நிலையில் இல்லை. பொருளாதார ரீதியாக பூசாரிகள் ஏழ்மை நிலையில் உள்ளனர். ஏழ்மை நிலையில் இருந்தாலும் அவர்கள் அன்பினால் பணக்காரர்கள் தான்.
ஒரு மனிதன் ஒருமுறை கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்தால், இறைவனின் அருளாசி கிடைக்கும். பூசாரிகள் தினமும் சாமியை தரிசனம் செய்து பூஜை செய்து வருகிறார்கள். எனவே அவர்கள் வாழ்வில் சிறந்த நிலையை அடைவார்கள். பூசாரிகள் பல சோதனைகள், சிக்கல்களை தாண்டி இறைபணி செய்து வருகின்றனர். ஒரு கோவிலுக்கு கோபுரங்கள், சிலைகள் இருப்பதால் சக்தி கிடையாது. அந்த சிலைகளுக்கு ஏற்றப்படி மூல மந்திரத்தை பூசாரிகள் தினமும் காலை, மாலை ஒரு மணி நேரத்தில் உச்சரிக்க வேண்டும். அப்போதுதான் அந்த கோவிலுக்கும், அப்பகுதி மக்களுக்கும் நன்மை பயக்கும். பூசாரிகள் மூலமந்திரங்கள் சொல்லும்போது அந்த கிராமத்தில் உள்ள கோவில்களுக்கு சக்தி கிடைக்கும்.
இறைவனின் அருளாசி கிடைக்கும்
பூசாரிகள் முழுமனதோடும், மன தூய்மை, உடல் தூய்மை, சுற்றுப்புற தூய்மையுடன் இருத்தல் அவசியம். இறைவனின் முழுமையான அருள் கிடைப்பதற்கு பூசாரிகள் முழுமனதுடன், தன்னம்பிக்கையுடன், விடாமுயற்சியுடன், பூஜை செய்து வந்தால் இறைவனின் அருளாசி கிடைக்கும்.
விழாவில் நாராயணி பீட மேலாளர் சம்பத், தங்கக்கோவில் இயக்குனர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story