கிராமங்களுக்கு சீராக குடிநீர் வழங்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு


கிராமங்களுக்கு சீராக குடிநீர் வழங்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 1 Aug 2017 4:15 AM IST (Updated: 1 Aug 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

வேட்டியம்பட்டி, செலியான்கொட்டாய் கிராமங்களுக்கு சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில், பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் குடிநீர் வசதி, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 250 மனுக்களை கொடுத்தனர்.

பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட வருவாய் அலுவலர், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த நிலையில் அகசிப்பள்ளி ஊராட்சி வேட்டியம்பட்டி, செலியான்கொட்டாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு கொடுத்தனர்.

அதில், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு, நீரின்றி வறண்டு விட்டது. இதனால் தினமும் 2 முதல் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து சுகாதாரமற்ற தண்ணீரை எடுத்து வந்து பயன்படுத்தி வருகிறோம். சம்பந்தப்பட்ட கிணற்றின் உரிமையாளர், விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை கூறி, குடிக்க தண்ணீர் எடுக்க தடை விதிக்கிறார்கள்.

குடிநீர் பிரச்சினையை தீர்க்க பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் துவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தண்ணீர் இல்லாமல் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் தினமும் தாமதமாக செல்கின்றனர். எனவே சீராக குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போல சின்னாறு, பலவதிம்மனப்பள்ளி, சென்னப்பள்ளி கிராமங்களை சேர்ந்த பெண்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். ஆழ்துளை கிணற்றில் ஒரு குடம் தண்ணீர் கிடைக்க மணி கணக்கில் காத்திருக்க வேண்டி உள்ளது. அனைத்து ஆழ்துளை கிணறுகளும் வற்றிவட்டது. இங்கு இரண்டு நீர்தேக்க தொட்டிகளிலும் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் ஏற்றி வினியோகம் செய்ய வேண்டும். வறண்ட ஆழ்துளை கிணறுகள் ஆழப்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story