சேலம் மாநகரில் பலத்த மழை: சாக்கடை கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்தது
சேலம் மாநகரில் பெய்த பலத்த மழையால் சாக்கடை கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்தது.
சேலம்,
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக கடுமையாக வெயில் அடித்து வந்தது. இந்த வெயிலினால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் நள்ளிரவு வரை சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்தது.
குறிப்பாக ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் பலத்த மழை கொட்டியது. சேலம் மாநகரில் பெய்த பலத்த மழையால், தாழ்வான பகுதிகளில் சாக்கடை கழிவுநீருடன் மழைநீர் ரோட்டில் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குட்டை போல தேங்கி நின்றது. பழைய பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் கிச்சிப்பாளையம் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் மண்ணால் மூடப்பட்டாலும் அங்கு தார்சாலை அமைக்கப்படவில்லை. இதனால், சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் வழுக்கி விழும் அபாயம் உள்ளது.
சேலம் திருவாக்கவுண்டனூர் 23-வது வார்டுக்குட்பட்ட சுகுமார் காலனி மிகவும் தாழ்வான பகுதியாகும். அங்கு நேற்று முன்தினம் பெய்த மழையால், சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தாழ்வான பகுதிக்குள் ஓடியது. அங்கு குடியிருக்கும் கோவிந்தராஜ், கந்தாயி, மணி ஆகியோரின் வீடுகளுக்குள் சாக்கடை கழிவுநீர் புகுந்தது. இதனால், அவர்களின் குடும்பத்தினர் இரவு முதல் நேற்று மாலை வரை கழிவுநீரை வெளியேற்ற வழியின்றி தவித்தனர். வாளி மற்றும் இதர பாத்திரம் கொண்டு கழிவுநீரை வெளியேற்றினாலும் அவை ஊத்துபோல வந்து கொண்டே இருந்தது.
இது தொடர்பாக கோவிந்தராஜ் கூறுகையில்,“எப்போது மழை பெய்தாலும் சாக்கடை கழிவுநீர் அடித்து கொண்டு இந்த பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது. இது தொடர்பாக சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாக்கடை கழிவுநீரால் நோய் தொற்றுவந்து சாகும்நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். நாங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து வருகிறோம்“ என்றார்.
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஏற்காடு-57.2, ஆணைமடுவு-53, ஓமலூர்-51, காடையாம்பட்டி-47.4, எடப்பாடி-45.2, வீரகனூர்-39, கரியகோவில்-30, சேலம்-18.8, வாழப்பாடி-15.2, மேட்டூர்-14.2, சங்ககிரி-12, கெங்கவள்ளி-10.2, தம்மம்பட்டி-10.2, ஆத்தூர்-6.4, பெத்தநாயக்கன்பாளையம்-6.
இவற்றில் ஏற்காட்டில் மட்டும் அதிகபட்சமாக 57.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story