நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளித்து பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்
நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து பிளஸ்-2 தேர்வில் பெற்ற கட்-ஆப் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ கல்லூரிகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி,
தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்த எழில் எவஞ்சலின் (வயது 17), மணிகண்டன் (17), ரிஹானா பாத்திமா (17) ஆகியோர் சமீபத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதி அதில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பு படிப்பதற்காக ஆர்வத்துடன் உள்ளனர். இந்த மாணவ, மாணவிகள் தங்களின் பெற்றோருடன் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்களுடன் மேலும் 4 மாணவர்களின் பெற்றோரும் வந்தனர்.
இந்த மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பிரதமருக்கு அனுப்பி வைப்பதற்காக மாவட்ட கலெக்டர் வெங்கடாசலத்திடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். நீட் நூழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து, இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் பெற்ற கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தி, இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவர்கள் தங்களின் மனுக்களில் கூறி இருந்தனர்.
இதுகுறித்து மாணவ, மாணவிகள் கூறியதாவது:-
கடந்த பிப்ரவரி, மார்ச் மாத காலகட்டத்தில் அரசு பொதுத்தேர்வுக்காக நாங்கள் தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருந்தோம். அப்போது தமிழகத்தில், நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு பெற்று விடுவோம் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் தெரிவித்தனர். தமிழக அரசும் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு விலக்கு வாங்கிக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, அரசு கல்லூரிகளில் இடம் பெறும் வகையில் கட்-ஆப் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று படித்தோம். தேர்வில் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்க எவ்வளவு கட்-ஆப் தேவையோ அந்த அளவுக்கு கட்-ஆப் பெற்று உள்ளோம். இதற்கிடையே நீட் தேர்வு நடத்தப்பட்டது. மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவ, மாணவிகளால் இந்த தேர்வில் தேர்ச்சி பெற முடிந்ததே தவிர அதிக மதிபெண்கள் பெற முடியவில்லை.
நீட் தேர்வு அடிப்படையில் மாணவ-மாணவிகள் சேர்க்கை நடத்தப்படும் என்று கூறப்படுவதால் கட்-ஆப் மதிப்பெண்களாக 199.25 மதிப்பெண் பெற்ற நிலையிலும் நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. எனவே மருத்துவம் படிக்க வேண்டும் என்று இருக்கும் மாணவ-மாணவிகளின் கனவுகள் நனவாகும் வகையில், இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் எடுத்த கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப்படிப்புகளுக்கு மாணவ, மாணவிகள் சேர்க்கை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story