ஊட்டி அருகே மண் அரிப்பை தடுக்க தேயிலை செடிகளை நடவு செய்யும் விவசாயிகள்


ஊட்டி அருகே மண் அரிப்பை தடுக்க தேயிலை செடிகளை நடவு செய்யும் விவசாயிகள்
x
தினத்தந்தி 1 Aug 2017 8:00 PM IST (Updated: 1 Aug 2017 3:57 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே சரிவான இடங்களில் மண் அரிப்பை தடுக்க தேயிலை செடிகளை விவசாயிகள் நடவு செய்து வருகின்றனர்.

ஊட்டி,

மலை மாவட்டமான நீலகிரியில் பெரும்பாலும் சரிவான பகுதிகள் காணப்படுகிறது. இதன் காரணமாக மழை காலங்களில் சரிவான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்அரிப்பு ஏற்படுகிறது. இதனால் வளமான மண் மழைநீரில் அடித்து செல்லப்படுகிறது. இதை தவிர்க்க விவசாயிகள் தங்களது நிலங்களில் படிமட்டங்கள் அமைத்து வருகின்றனர்.

இந்த படிமட்ட சரிவுகள் மழைக்காலங்களில் சரிந்து விழுந்து சேதத்தை ஏற்படுத்துகிறது. இதை தவிர்க்க கொதுமுடி, திருச்சிக்கடி, இடுஹட்டி, கெந்தொரை உள்ளிட்ட பகுதிகளில் சரிவான இடங்களில் விவசாயிகள் தேயிலை நாற்றுகளை நடவு செய்து வளர்த்து வருகின்றனர்.
இது குறித்து விவசாயி குள்ளாகவுடர் கூறிய தாவது:-

நீலகிரியில் சரிவான பகுதிகளே அதிகமாக உள்ளன. சமதள பகுதிகள் குறைவு. சரிவான பகுதிகளில் மழை காலங்களில் மண் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் படிமட்டம் அமைத்தோம். தற்போது சரிவான பகுதிகளில் மண் அரிப்பு மற்றும் மண்சரிவு ஏற்படாமல் தடுக்க தேயிலை செடிகளை வளர்த்து வருகிறோம். தேயிலை செடிகளின் வேர் மண்ணை நன்றாக இறுக்கி பிடித்து கொள்ளும். இதனால் மண்சரிவு ஏற்படாது.

அதிக இடங்களில் தேயிலை செடிகள் நடுவதால் கூடுதல் வருவாய் ஏற்படுகிறது. ஆனால் ஒரு சில விவசாயிகள் தேயிலை செடிகளுக்கு பதிலாக கால்நடைகளுக்கு உணவாக பயன்படும் தட்டை புற்களை வளர்க்கின்றனர். இதனால் மாடுகளுக்கு தேவையான புற்கள் கிடைப்பதோடு, மண் அரிப்பும் தடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story