ஆற்காடு அருகே வக்பு வாரியஇடத்தை மீட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ஆற்காடு அருகே வக்பு வாரியஇடத்தை மீட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2017 4:15 AM IST (Updated: 1 Aug 2017 11:52 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு அருகே வக்பு வாரியஇடத்தை மீட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ஆற்காடு,

ஆற்காட்டை அடுத்த முப்பதுவெட்டி எல்லைக்குட்பட்ட கலவை ரோடு பகுதியில் உள்ள சுமார் 3 ஏக்கர் நிலம் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இந்த நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதனை மீட்க வலியுறுத்தியும் சம்பந்தப்பட்ட நிலத்தில் ஆற்காடு திப்பு சுல்தான் நற்பணி மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நற்பணி மன்ற நிர்வாகி முன்னா தலைமை தாங்கி பேசினார். இதில் 20 பெண்கள் உள்பட 40–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story