விழுப்புரம் மாவட்டத்தில் 9 தாசில்தார்கள் இடமாற்றம்: கலெக்டர் உத்தரவு


விழுப்புரம் மாவட்டத்தில் 9 தாசில்தார்கள் இடமாற்றம்: கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 2 Aug 2017 3:45 AM IST (Updated: 2 Aug 2017 12:36 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 9 தாசில்தார்கள் இடமாற்றம் செய்து, கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் தாசில்தார் நிலையில் பணியாற்றி வந்த 9 பேர் நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:–

திண்டிவனம் சிப்காட் தனி தாசில்தார் ரங்கநாதன் விழுப்புரம் நில எடுப்பு தனி தாசில்தாராகவும், அங்கிருந்த தனி தாசில்தார் சிவபிரபாநாதன் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளராகவும் (பொது), விழுப்புரம் தனித்துணை ஆட்சியர் அலுவலக தனி தாசில்தார் ரமா விழுப்புரம் நிலஎடுப்பு தனி தாசில்தாராகவும், அங்கிருந்த தனி தாசில்தார் கணேஷ் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளராக (பொது) பணியாற்றி வந்த பார்த்தசாரதி விழுப்புரம் தனித்துணை ஆட்சியர் அலுவலக தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதேபோல் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக இருந்த பழனி திருக்கோவிலூர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும், அங்கிருந்த நேர்முக உதவியாளர் சிவசங்கரன் சங்கராபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், கள்ளக்குறிச்சி குடிமைப்பொருள் தனி தாசில்தார் சையத்காதர் கள்ளக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், திருக்கோவிலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் செல்வராஜ் திண்டிவனம் முத்திரைத்தாள் தனி தாசில்தாராகவு மாற்றப்பட்டனர்.

மேலும் உளுந்தூர்பேட்டை தலைமையிடத்து துணை தாசில்தாராக பணியாற்றி வந்த காதர்அலி பதவி உயர்வு பெற்று கள்ளக்குறிச்சி குடிமைப்பொருள் தனி தாசில்தாராகவும், விக்கிரவாண்டி வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றி வந்த செல்வம் பதவி உயர்வு பெற்று திருக்கோவிலூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் பிறப்பித்துள்ளார்.


Next Story