வீட்டு மனைப்பட்டா கேட்டு மறியல் போராட்டம்: “சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்யக்கூடாது”
“ஏழை மக்களை பாதிக்கும் சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்யக்கூடாது“ என்று சேலத்தில் வீட்டு மனைப்பட்டா கேட்டு நடந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
சேலம்,
புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா, வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை, சுகாதார வசதி, சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட செயலாளர் தங்கவேலு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது அதிகாரிகளை தொடர்பு கொண்டு மனுகொடுக்க வருவதாக அவர்கள் கூற நினைத்தனர். ஆனால், அதிகாரிகள் யாரும் செல்போனை எடுக்கவில்லை.
அதைத்தொடர்ந்து சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென மறியல் போராட்டம் நடந்தது. மத்திய, மாநில அரசுக்கு எதிராக குரல் எழுப்பியபடி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த மறியலில் மாநிலக்குழு உறுப்பினர் ஜோதிலட்சுமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர், போலீசார் கலெக்டர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பேசினர். அதன் பின்னர் மனுகொடுக்க அனுமதிக்கப்பட்டது.
போராட்டத்தின்போது ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒட்டுமொத்த மக்களை பாதிக்கும்
சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவெடுத்தது. மாதத்திற்கு ரூ.4 உயர்த்தி 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு இனி மானியமே இருக்காது. மத்திய அரசின் இந்த முடிவானது ஏழை-நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். அதற்கும் மேலாக மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின் ஒரு பகுதியாக நிபந்தனைகளை ஏற்று மாநில அரசாங்கம் ஒரு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் வருமானம் பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு எந்த பொருளும் மானிய விலையில் விற்பனை செய்யப்பட மாட்டாது.
ரேஷன் கடைக்கு அவர்கள் போகமுடியாது. அப்படியானால், சாதாரணமான முறைசாரா தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படும். ஒரு மாதத்திற்கு ரூ.8,500 வருமானம் உள்ளவர்கள் இனி வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்கள் என்று அர்த்தம். அடுத்து 5 ஏக்கர் மற்றும் அதற்குமேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் ரேஷன் பொருட்கள் கிடையாது என்ற அறிவிப்பும் வேதனையாக உள்ளது. இது ஒட்டுமொத்த பொதுவினியோக முறையை சீர்குலைப்பதற்காக மத்திய-மாநில அரசுகள் இந்த அறிவிப்பை செய்திருக்கிறார்கள்.
மாநில அமைச்சர் காமராஜ் சொல்லும்போது, நாங்கள் மத்திய அரசின் அறிவிக்கையைத்தான் வெளியிட்டு இருக்கிறோம். ஆனால், தமிழகத்தில் அதை அமலாக்கமாட்டோம் என்று சொல்லி இருக்கிறார். மக்களை மத்திய அரசும் ஏமாற்றக்கூடாது. மாநில அரசும் ஏமாற்றக்கூடாது. ஒட்டுமொத்த மாநில மக்களையும், பொதுவினியோக திட்டத்தையும் பாதுகாப்பதற்காகத்தான் இந்த போராட்டம் நடத்தி வருகிறோம்.
ஏழை மக்களை பாதிக்கும் சமையல் எரிவாயு மானியத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கூடாது. எனவே, எரிவாயு மானியம் ரத்து செய்யும் அறிவிப்பையும், ரேஷன் பயனாளிகளுக்கு விதித்திருக்கும் நிபந்தனைகளையும் மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்திட வேண்டும். மத்திய அரசு தொடர்ந்து மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அந்த மத்திய அரசுக்கு ஒத்து ஊதக்கூடிய அடிப்படையில்தான் ஒரு கைப்பாவையாக மாநில அ.தி.மு.க. அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.
தமிழக அரசு மக்கள் பாதிக்கப்படக்கூடிய பல்வேறு பிரச்சினைகளில் தீர்வுகாண உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. குறிப்பாக ‘நீட்’ தேர்வு. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு, அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 5 சதவீதம் மட்டுமே கிடைக்கும். மாணவர்களின் நலன்கருதி ‘நீட்’ தேர்வில் விலக்கு அளிக்கக்கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளிக்கவில்லை. குடியரசு தலைவரும் ஒப்புதல் அளிக்கவில்லை.
அடுத்து மாநில அரசுக்கு வர வேண்டிய ரூ.17 ஆயிரம் கோடியை கொடுக்கவும் மத்திய அரசு மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய அரசு மறுத்து வருகிறது. இவை குறித்து கேட்கவும் மாநில அரசு தயாராக இல்லை. இந்த இரு அரசுகளும் தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. சமீபகாலமாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எனவே, மாநில அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க போதிய நடவடிக்கையும், சிகிச்சையும் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story