பெரம்பலூர் கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்
பெரம்பலூர் கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் உடற்கல்வித்துறை சார்பில் பெரம்பலூர் கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நேற்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் பிருத்விராசன் போட்டிகளை தொடங்கி வைத்தார். பெரம்பலூர், குன்னம் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் இந்த கல்வி மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர்.
14, 17, 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 600 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், நீளம்-உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், கோலூன்றி தாண்டுதல் உள்ளிட்ட தடகள போட்டிகள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.
உடற்கல்வி ஆசிரியர்கள் ரவி, சரவணன், தட்சிணாமூர்த்தி, அரிவேல், சீனிவாசன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு போட்டிகளை நடத்தினர். கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் செய் திருந்தார். பெரம்பலூர் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் கரூர் மாவட்டத்தில் நடை பெறவுள்ள மண்டல அள விலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

Related Tags :
Next Story