மைனர் பெண்ணை கடத்தி கற்பழித்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை


மைனர் பெண்ணை கடத்தி கற்பழித்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 2 Aug 2017 2:00 AM IST (Updated: 2 Aug 2017 1:33 AM IST)
t-max-icont-min-icon

மைனர் பெண்ணை கடத்தி கற்பழித்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தார்வார் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

உப்பள்ளி,

மைனர் பெண்ணை கடத்தி கற்பழித்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தார்வார் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

மைனர் பெண்

தார்வார் தாலுகா குருபகட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரசன்னகுமார்(வயது 24). தொழிலாளி. இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த மைனர் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தின் மூலம் பிரசன்னகுமாரும், அந்த மைனர் பெண்ணும் பழகி வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மைனர் பெண் பக்கத்து கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பிரசன்னகுமார், மைனர் பெண்ணிடம் நான் உன்னை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று வீட்டில் விட்டு விடுகிறேன் என்று கூறியுள்ளார்.

கடத்தி கற்பழிப்பு


பிரசன்னகுமார் கூறியதை உண்மை என்று நம்பிய மைனர் பெண்ணும், அவருடன் மோட்டார் சைக்கிளில் ஏறி சென்றார். ஆனால் அவர், மைனர் பெண்ணை வீட்டிற்கு அழைத்து செல்லாமல் கதக்கிற்கு கடத்தி சென்றார். அங்கு ஒரு வீட்டில் அடைத்து வைத்து மைனர் பெண்ணை, பிரசன்னகுமார் கற்பழித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் வெளியே சென்ற தனது மகள் நீண்டநேரமாக வீட்டிற்கு வராததால், மைனர் பெண்ணின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து எங்கள் மகள் மாயமாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் மைனர் பெண்ணின் பெற்றோர் தார்வார் புறநகர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் மைனர் பெண்ணை தேடிவந்தனர்.

10 ஆண்டுகள் சிறை

அப்போது பிரசன்னகுமார், மைனர் பெண்ணை கதக்கிற்கு கடத்தி சென்றது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கதக்கிற்கு சென்று வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த மைனர் பெண்ணை மீட்டனர். மைனர் பெண்ணிடம் போலீசார் விசாரித்த போது பிரசன்னகுமார் தன்னை கடத்தி வந்து கற்பழித்ததை கூறி கதறி அழுதார்.

இதையடுத்து மைனர் பெண்ணை கடத்தி கற்பழித்ததாக பிரசன்னகுமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது தார்வார் மாவட்ட கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 13-ந் தேதி நடந்தது.

கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று முன்தினம் நீதிபதி சாவித்ரி தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட பிரசன்னகுமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Next Story