பெண் போலீஸ் பணிக்கு உடல்திறன் தகுதி தேர்வு ஐ.ஜி. மேற்பார்வையில் நடந்தது


பெண் போலீஸ் பணிக்கு உடல்திறன் தகுதி தேர்வு ஐ.ஜி. மேற்பார்வையில் நடந்தது
x
தினத்தந்தி 2 Aug 2017 4:15 AM IST (Updated: 2 Aug 2017 1:58 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் பெண் போலீஸ் பணிக்கு உடல்திறன் தகுதி தேர்வு போலீஸ் ஐ.ஜி. கல்பனா நாயக் மேற்பார்வையில் நடைபெற்றது.

தர்மபுரி,

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 2-ம் நிலை போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வில் 4,351 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 639 பேர் பெண்கள். எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல்திறன் தகுதிதேர்வு தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 27-ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. முதலில் ஆண்களுக்கான உடல்திறன் தகுதி தேர்வுகள் நடைபெற்றன. உடல் திறன் தகுதிதேர்வு மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2391 பேர் தகுதி பெற்றனர்.

இதைத்தொடர்ந்து பெண்களுக்கான உடல்திறன் தகுதி தேர்வு தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை போலீஸ் ஐ.ஜி. கல்பனா நாயக் மேற்பார்வையிட்டார். சிறைத்துறை போலீஸ் டி.ஐ.ஜி. பாஸ்கரன் தலைமையில் போலீஸ் அதிகாரிகள், பெண்களுக்கான உடல்திறன் தகுதி தேர்வை முன்னின்று நடத்தினார்கள்.

உடல்திறன் தகுதி தேர்வில் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த தேர்வில் பங்கேற்ற பெண்களின் உயரம் மற்றும் பல்வேறு வகையான உடல் திறன் குறித்து சோதனைகள் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து ஓட்டப்பந்தயம், கயிறு ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு தேர்வு போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

போலீஸ் பணிக்கு தேர்வுகள் அனைத்தும் நேர்மையான முறையில் நடப்பதால் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் தெரிவித்துள்ளார். 

Next Story