குஜராத் காங். எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜனதாவுக்கு அவசியம் இல்லை
டெல்லி மேல்-சபை தேர்தலில் வெற்றிபெற குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜனதாவுக்கு அவசியம் இல்லை என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறினார்.
சிக்கமகளூரு,

மேல்-சபை தேர்தலில்...
சிக்கமகளூருவில் சி.டி.ரவி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
குஜராத் மாநிலத்தில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு காலியாகும் 3 இடங்களுக்கு, வருகிற 8-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி மற்றும் பல்வந்த் சிங் ராஜ்புத் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு உள்ளனர்.
இதேபோல் காங்கிரஸ் சார்பில் அகமது பட்டேல் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார்.
உட்கட்சி பூசல் காரணமாக..
டெல்லி மேல்- சபைக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 47 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. 182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டசபையில் எங்களுக்கு 116 எம்.எல்.ஏ.க்களின் பலம் உள்ளது. இவர்களை வைத்து எங்களால் டெல்லி மேல்-சபைக்கு 2 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க முடியும். இதேபோல் 57 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் குஜராத் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டு உள்ள உட்கட்சி பூசல் காரணமாக 6 எம்.எல்.ஏ.க்கள் அந்த கட்சியில் இருந்து விலகி எங்கள் கட்சியில் இணைந்து உள்ளனர்.
ஆனால் டெல்லி மேல்-சபை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை நாங்கள் விலைக்கு வாங்கி வருவதாக அந்த கட்சியை சேர்ந்தவர்கள் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
பா.ஜனதாவுக்கு அவசியம் இல்லை
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை நாங்கள் விலைக்கு வாங்குவதாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க வேண்டிய அவசியமும் பா.ஜனதாவுக்கு இல்லை. மத்தியில் பா.ஜனதாவின் நிர்வாக திறமையை பார்த்து மற்ற கட்சியில் உள்ள தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் அவர்களது கட்சியில் இருந்த விலகி எங்கள் கட்சிக்கு தானாக முன்வந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.
உண்மையில் மேல்-சபை தேர்தலில் வெற்றி பெற்ற ஆக வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சி தான் தங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் தருவதாக கூறி பெங்களூரு புறநகரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்து உள்ளனர்.
மக்கள் மீது அக்கறை...
தற்போது குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு உண்மையில் மக்கள் மீது அக்கறை இருந்தால் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை, அவரவர் தொகுதிகளுக்கு அனுப்பிவைத்து மக்கள் குறைகளை கேட்க செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு பதவி ஆசை இருப்பதால் தான் இங்கு தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை சொகுசு விடுதியில் அடைத்து வைத்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story