தானே அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 2 வாலிபர்கள் பலி
தானே அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 2 வாலிபர்கள் பலியானார்கள்.
மும்பை,
தானே அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 2 வாலிபர்கள் பலியானார்கள்.
மழைவெள்ளம்தானே மாவட்டம் டோல்கம்ப் கிராமத்தில் உள்ள ஆற்றில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த ஆற்றில் குளிப்பதற்காக 5 வாலிபர்கள் இறங்கினார்கள். அவர்கள் வெள்ளத்தை பொருட்படுத்தாமல் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதில் அவர்களை வெள்ளம் அடித்து சென்றது. தண்ணீரில் மூழ்கிய அவர்கள் உதவி கேட்டு அபயக்குரல் எழுப்பினார்கள்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் ஆற்றில் குதித்து 3 பேரை பத்திரமாக கரைக்கு மீட்டு வந்தார். மற்ற இரண்டு பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதுபற்றி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
2 வாலிபர்கள் பலிஅவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களை கட்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், வாலிபர்களின் உடல்கள் நேற்று முன்தினம் பிணமாக கரை ஒதுங்கின.
தகவல் அறிந்து வந்த அப்பகுதி போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர்களது பெயர் அக்பர் அன்சாரி (வயது21), ஜாவேத் அன்சாரி (22) என்பதும், இருவரும் மும்பையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அங்குள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்த போது, அவர்கள் ஆற்றில் வெள்ளத்தில் மூழ்கி பலியானது தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.