போலீஸ் பணிக்கான உடல்தகுதி தேர்வு: திண்டுக்கல், தேனியை சேர்ந்த 908 பெண்கள் பங்கேற்பு


போலீஸ் பணிக்கான உடல்தகுதி தேர்வு: திண்டுக்கல், தேனியை சேர்ந்த 908 பெண்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 2 Aug 2017 6:30 PM IST (Updated: 2 Aug 2017 5:56 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உடல்தகுதி தேர்வு நடக்கிறது.

திண்டுக்கல்,

தமிழகத்தில் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உடல்தகுதி தேர்வு நடக்கிறது. அதன்படி திண்டுக்கல், தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று பெண்களுக்கான உடல்தகுதி தேர்வு நடந்தது. இதனை திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. கார்த்திகேயன், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இதில் திண்டுக்கல், தேனியை சேர்ந்த 1,074 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதில் 908 பேர் பங்கேற்றனர். இதையடுத்து அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல், 400 மீட்டர் ஓட்டம், உயரம் அளத்தல் ஆகியவை நடந்தன. இதில் தேர்வானவர்களுக்கு வருகிற 5-ந்தேதி நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய உடல்தகுதி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மேலும் இன்று (புதன்கிழமை) முதல் முதல்கட்ட உடல்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆண்களுக்கு கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் ஆகியவை நடத்தப்படுகின்றன.

Next Story