ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலை கண்டறிய ரூ.13 லட்சம் மதிப்பில் நவீன கருவிகள்
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளை கண்டறிய ரூ.13 லட்சம் மதிப்பில் நவீன கருவிகள் நிறுவ ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக டீன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீனாக இருந்த டாக்டர் ரவீந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன் ஓய்வுபெற்றார். அதைத் தொடர்ந்து அந்த பணியிடம் காலியாக இருந்தது. இந்த நிலையில் மருத்துவ கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் டாக்டர் ராதாகிருஷ்ணன், கூடுதலாக டீன் பொறுப்பை கவனிக்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீனாக (பொறுப்பு) டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 3 குழந்தைகள் உள்பட 8 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் வீரியத்துடன் இருந்தது. காய்ச்சல் வந்தவர்களின் பற்களில் இருந்து ரத்தம் வடியும். ஆனால் தற்போது வரும் டெங்கு காய்ச்சல் அவ்வாறு இல்லை. இதனால் காய்ச்சல் அறிகுறிகளை கண்டறிய நவீன கருவிகள் தேவைப்படுகின்றன.
எனவே, இதை கருத்தில் கொண்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.13 லட்சம் மதிப்பில் நவீன கருவிகள் நிறுவ முடிவு செய்யப்பட்டது. கருவிகள் வாங்க தேவையான நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் இந்த கருவிகள் வந்துவிடும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த கருவிகள் நிறுவப்பட்டுவிட்டால் காய்ச்சல் பரிசோதனைக்காக நோயாளிகளை வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது.
மேலும், ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கண் நோய்க்கு லேசர் சிகிச்சை செய்ய இயலாத நிலை இருந்து வருகிறது. இதனால் சிகிச்சைக்காக நோயாளிகளை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. இந்த நிலையில் கண் சிகிச்சைக்கு தேவையான நவீன கருவிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த கருவிகளின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். இந்த கருவிகளை நிறுவ போதுமான கட்டிடம் இல்லை. இதன் காரணமாக கருவிகளை பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.
இதைத் தவிர்ப்பதற்காக புதிய கட்டிடம் கட்டப்பட இருக்கிறது. கட்டிட வேலைகள் முடிந்ததும் அனைத்து கருவிகளும் புதிய கட்டிடத்தில் நிறுவப்பட்டு சிகிச்சைகள் தொடங்கப்படும். மேலும் கண் தானம் செய்வதற்கு வசதியாக கண் வங்கியும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு டீன் (பொறுப்பு) டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

Related Tags :
Next Story