அரியலூரில் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள்
அரியலூரில் கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் நேற்று நடை பெற்றன.
தாமரைக்குளம்,
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி விளையாட்டு போட்டிகள், பேச்சுப்போட்டி ஆகியவை ஆங்காங்கே நடைப்பெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக அரியலூர் மாவட்ட கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. போட்டிகளை அரியலூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சிற்றரசு தொடங்கி வைத்தார். இதில் கால்பந்து, கைப்பந்து, வளைப்பந்து, கோ-கோ, கபடி ஆகிய விளையாட்டு போட்டிகள் மாணவ-மாணவிகளுக்கென தனித்தனியாக நடத்தப் பட்டன.
போட்டிகளில் அரியலூர் அரசு கல்லூரி, அண்ணா உறுப்பு பொறியியல் கல்லூரி, எம்.ஆர்.சி.கல்லூரி உள்ளிட்ட 6 கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்டத்தில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை அரசு கல்லூரி உடற்கல்வி பயிற்சியாளர்கள் பத்மநாதன், ஜெயக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story