மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது


மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 3 Aug 2017 4:00 AM IST (Updated: 3 Aug 2017 12:43 AM IST)
t-max-icont-min-icon

மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

மங்களமேடு,

மங்களமேட்டை அடுத்துள்ள கீழப்பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதார துறை சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு குன்னம் சித்த மருத்துவர் அன்பழகன் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர்கள் முருகேசன், பிரபு ஆகியோர் கொண்ட குழு டெங்கு காய்ச்சல் முன்தடுப்பு பணிகள், ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். முகாமில், பள்ளி மாணவ, மாணவிகள் 600 பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.டெங்குகாய்ச்சல், கொசு உற்பத்தி யாகும் இடங்கள், அவைகளை அழித்தல் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதேபோல் துங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தமயந்தி தலைமை தாங்கினார். குன்னம் சித்த மருத்துவர் அன்பழகன், துங்கபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அனிதா ஆகியோர் டெங்கு காய்ச்சல் குறித்து விளக்கம் அளித்து பேசினர். பள்ளி மாணவர்கள் 800 பேருக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது. 

Related Tags :
Next Story