மதுக்கடைக்கு செல்லும் பாதை அடைப்பு: விளைபொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை


மதுக்கடைக்கு செல்லும் பாதை அடைப்பு: விளைபொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை
x
தினத்தந்தி 3 Aug 2017 4:00 AM IST (Updated: 3 Aug 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூரில் மதுக்கடைக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டதால், விளைபொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பாதையை திறக்காவிட்டால், பொன்னகர் செல்லும் சாலையை விவசாயிகள் மூட முடிவு செய்துள்ளனர்.

சின்னமனூர்,

சின்னமனூர் நகராட்சி 2–வது வார்டுக்கு உட்பட்ட பொன்னகர் பகுதியில் புதிதாக மதுபான கடையை திறக்கப்பட்டது. இந்த கடை மூடவேண்டும் என்று கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால் கடை மூடப்படவில்லை.

கடையில் மது அருந்திவிட்டு ஊர் வழியாக செல்லும் குடிமகன்களால் பல்வேறு தொந்தரவுகள் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து ஊரின் வழியாக மதுக்கடைக்கு செல்லும் பாதையை அப்பகுதி மக்கள் முட்களை கொண்டு அடைத்தனர். இதனால் அந்த ஊரின் வழியாக மதுக்கடைக்கு யாரும் செல்ல முடியவில்லை.

தற்போது அந்த கடைக்கு தனியார் தோட்டத்தில் உள்ள மற்றொரு பாதை வழியாக மதுபிரியர்கள் சென்று வருகின்றனர். பொன்னகரில் பாதை அடைக்கப்பட்டதால் அப்பகுதி வழியாக விளைநிலங்களில் இருந்து விளைபொருட்களை விவசாயிகள் சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறுகின்றனர். எனவே அந்த பாதையை திறக்கவேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, நகராட்சி ஆணையாளர் ஆகியோரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே அந்த பாதையை திறக்க மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் பொன்னகர் செல்லும் சாலையை மூட முடிவு செய்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story