கரூரில் சாலையில் ‘திடீரென’ பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி


கரூரில் சாலையில் ‘திடீரென’ பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 3 Aug 2017 4:15 AM IST (Updated: 3 Aug 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் சாலையில் ‘திடீரென’ பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

கரூர்,

கரூரில் சர்ச் கார்னரில் இருந்து பசுபதிபாளையம் செல்லக்கூடிய சாலையில் உள்ள ராஜாஜி சாலையில் நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். மேலும் பள்ளத்தின் அருகே சாலையில் விரிசல்கள் ஏற்பட்டிருந்தன. சாலையில் வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நேரத்தில் பெரிய வாகனங்கள் எதுவும் வராததால் பள்ளத்தில் சிக்கவில்லை. அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது. அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கயிறு கட்டி வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர்.

பள்ளம் ஏற்பட்ட சாலையில் கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்பு இதேபோல 2 இடங்களில் பள்ளம் ஏற்பட்டதாகவும், தற்போது 3-வது முறையாக பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறினர். தார்ச்சாலை தரமாக அமைக்காததால் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் நில அதிர்வு காரணமாக பள்ளம் உருவானதா? என அச்சம் அடைந்தனர். சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை பொதுமக்கள் பார்வையிட அந்த பகுதியில் குவிந்தனர். சாலையில் பள்ளம் ஏற்பட்டது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். சாலையில் ‘திடீரென’ பள்ளம் ஏற்பட்ட தகவல் பரவியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Tags :
Next Story