அரசு மருத்துவமனை ஊழியர்களிடையே தகராறு: போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
அரசு மருத்துவமனை ஊழியர்களிடையே தகராறு காரணமாக மணமேல்குடியில் வர்த்தக சங்கத்தினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணமேல்குடி,
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரிபவர் ஜெகன். அதே மருத்துவமனையில் தலைமை செவிலியராக பணிபுரிவர் அமுதா. இவர்கள் இரண்டு பேருக்கும் பணிநேரத்தில் ஒத்துழைப்பு இல்லாமல் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து நேற்று அமுதாவிற்கும் ஜெகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வர்த்தகசங்கத்தை சேர்ந்த சிலர் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று சமரசம் செய்துள்ளனர் .
இதில் அமுதாவை வர்த்தக சங்க நிர்வாகிகள் சிலர் தகாதவார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது இதனை அடுத்து அமுதா மணமேல்குடி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மணமேல்குடி வர்த்தக சங்கத்தலைவர் ஜெயராமன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர் .
இதனை அடுத்து அமுதா தனக்கு நடந்த விஷயங்களை தனது கணவரிடம் கூறினார். இதில் ஆத்திரமடைந்த அமுதாவின் கணவர் பழனி அவரது நண்பர்கள் 10 பேருடன் சென்று மருத்துவர் ஜெகனின் மருத்துவமனைக்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக மருத்துவர் ஜெகன் மணமேல்குடி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பழனி மற்றும் அவரது நண்பர்கள் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் மணமேல்குடி நகரப்பகுதியில் வர்த்தகசங்க நிர்வாகத்திற்கு உட்பட்ட கடைக்குள் சென்று கொலை மிரட்டல் விடுத்த பழனி என்பவரை கைதுசெய்ய கோரி மணமேல்குடி வர்த்தக சங்கத்தினர் திடீரென கடைகளை அடைத்து மணமேல்குடி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தினர்.
இதுகுறித்து கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு காமராஜ், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரண்டு தரப்பினரிடமும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வர்த்தக சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த பிரச்சினையால் மணமேல்குடி பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Related Tags :
Next Story