பல்லடத்தில் பள்ளி மாணவியை அழைக்க சென்ற தம்பிக்கு அடி-உதை
பல்லடத்தில் பள்ளி மாணவியை அழைக்கச்சென்ற தம்பிக்கு அடி-உதை விழுந்தது. இதில் காயம் அடைந்த அவர் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பல்லடம் போலீசார் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல்லடம்,
பல்லடம் கணபதிபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மோட்டார்சைக்கிள் பழுதுபார்க்கும் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இவருக்கு காயத்திரிதேவி (வயது 18) என்ற மகளும், ராஜா(17) என்ற மகனும் உள்ளனர். ராஜா 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு அங்குள்ள ஒரு ஐ.டி.ஐ.யில் சேர இருந்தார்.
காயத்திரிதேவி பல்லடம் சின்னக்கரையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் தனது அக்காவை அழைப்பதற்காக ராஜா மோட்டார்சைக்கிளில் நேற்றுமாலை அந்த பள்ளிக்கு சென்றார்.
அப்போது அதே பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் தினேஷ் என்ற மாணவரும் மேலும் குடிபோதையில் இருந்த 2 பேரும் சேர்ந்து ராஜாவின் மோட்டார்சைக்கிளை தடுத்து நிறுத்தி ராஜாவை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியை சேர்ந்த 15 மாணவர்களும் வந்து ராஜாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் நேற்று பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் ராஜாவை தாக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

Related Tags :
Next Story