சேலத்தில் 2-ம் நிலை காவலர் பணிக்கு இளைஞர்களுக்கு கயிறு ஏறும் உடற்திறன் தேர்வு
சேலத்தில் 2-ம் நிலை காவலர் பணிக்கு, இளைஞர்களுக்கு கயிறு ஏறும் உடற்திறன் தேர்வு நடந்தது. 7 ராணுவ வீரர்களும் ஆர்வமாக பங்கேற்றனர்.
சேலம்,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2-ம் நிலை காவலர் பணிக்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற்தகுதி மற்றும் உடற்திறன் தேர்வு கடந்த மாதம் 27-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. சேலம், நாமக்கல் மாவட்டத்தில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உடற்தகுதி, உடற்திறன் தேர்வு நடந்து வருகிறது. இங்கு 3,822 ஆண்களுக்கும், 782 பெண்களுக்கும் தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த 4 நாட்களாக ஆண்களுக்கான நடந்த தேர்வில் 3,432 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
உடற்தகுதிக்கான தேர்வில் 2,197 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு நேற்று முதல் கயிறு ஏறுதல், 400 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி உடற்திறன் தேர்வு நடந்தது. சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார், போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் முன்னிலையில் இத்தேர்வு நடந்தது.
இந்திய ராணுவத்தில் 10 ஆண்டுகாலம் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு, போலீஸ் பணியில் முன்னுரிமையும் சில சலுகைகளும் அளிக்கப்பட்டன. அதாவது வயது வரம்பில் தளர்வு செய்வதுடன், சான்றிதழ் சரிபார்ப்பு மட்டும் பார்க்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.
அதன்படி சேலம் மாவட்டம் கொழிஞ்சிப்பட்டி ராஜேந்திரன், பள்ளிப்பட்டி பழனிசாமி, மேட்டூர் அருகே உள்ள தங்கமாபுரிபட்டணம் பன்னீர்செல்வம், மகுடஞ்சாவடி பாலாஜி, காகாப்பாளையம் சிவகுமார், மேட்டூர் ரக்மி மற்றும் அருள்முருகன் ஆகிய 7 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. இவர்கள் அனைவரும் இந்தியா-சீனா எல்லையில் உள்ள ஜம்மு, அருணாசலபிரதேசம் மாநிலங்களில் ராணுவத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்கள் ஆவர்.

Related Tags :
Next Story