கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடாத துப்புரவு பணியாளர்கள் 300 பேர் திடீர் நீக்கம்
கோவை மாநகராட்சி பகுதியில் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடாத ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவு பணியாளர்கள் 300 பேரை திடீரென்று நீக்கி தனி அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
கோவை
கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுதவிர மாநகராட்சி பகுதியில் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுவதற்காக ஒரு வார்டுக்கு தலா 10 பணியாளர்கள் என்று மொத்தம் 1000 ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் மாநகராட்சி பகுதியில் தீவிர கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதில் சிலர் சரியாக பணிக்கு வரவில்லை என்றும், சிலர் பணிக்கு வந்தாலும் சரியாக கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுவது இல்லை என்றும் மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயனுக்கு புகார் சென்றது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அவர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தியதில் பலர் சரியாக பணிக்கு வர வில்லை என்பது உறுதியானது. அதிகாரிகள் இதுகுறித்து மாநகராட்சி தனி அதிகாரிக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஒரு வார்டுக்கு தலா 3 பணியாளர்கள் என்று 100 வார்டுகளிலும் மொத்தம் 300 ஒப்பந்த அடிப்படையிலான துப்புரவு பணியாளர்களை நீக்கி, தனி அதிகாரி விஜயகார்த்திகேயன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, நீக்கம் செய்யப்பட்ட 300 பேர் சரியாக பணியில் ஈடுபட வில்லை. இதுபோன்று வேறு யாரும் பணி செய்யாமல் உள்ளனரா என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆய்வில், பணி செய்யாமல் இருப்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Related Tags :
Next Story