டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மது பாட்டில்கள் கொள்ளை


டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மது பாட்டில்கள் கொள்ளை
x
தினத்தந்தி 4 Aug 2017 4:30 AM IST (Updated: 3 Aug 2017 10:30 PM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே சீதப்பால் பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இதில் தாழக்குடியை சேர்ந்த முத்துகுமார், என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த பிரேம்கான் ஆகியோர் மேற்பார்வையாளர்களாக உள்ளனர். மேலும், 2 பேர்  விற்பனையாளர்களாக பணிபுரிந்து வருகிறார் கள். நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்ததும் டாஸ்மாக் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர். இந்த கடையில் ‌ஷட்டரும், அதன் முன்பு ஒரு கிரில் கதவும் உள்ளது.

நேற்று காலை ஊழியர்கள் கடையை திறக்க சென்றனர். அப்போது, முன் பக்க கிரில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும், கடையின் ஒரு பக்க சுவரில் துளை போடப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் ‌ஷட்டரை திறந்து உள்ளே சென்றனர். அங்கு கடையில் இருந்த 55 மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

யாரோ மர்ம நபர்கள் கிரில் கதவை உடைத்துள்ளனர். தொடர்ந்து ‌ஷட்டரை திறக்க முயன்றபோது முடியவில்லை. இதையடுத்து பக்கவாட்டு சுவரில் சிறிய அளவில் துளை போட்டுள்ளனர். பின்னர் துளை வழியாக கையை நுழைத்து மதுபாட்டில்களை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

இது குறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், சுவரில் துளைபோட்டு மது பாட்டில்களை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story