தொழிலாளி மர்ம சாவு வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்
மார்த்தாண்டம் அருகே தொழிலாளி மர்மமான முறையில் வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே ஞாறாம்விளை, தேனாம்பாறையை சேர்ந்தவர் ஆரீஸ் (வயது 72), தொழிலாளி. இவருடைய மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 4 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. திருமணத்திற்கு பிறகு மகன் கேரளாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனால், ஆரீஸ் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
நேற்று காலை ஒரு மகள் தந்தை வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியது. மேலும், பின்புற கதவு மற்றும் ஜன்னல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது சமையல் அறையில் ஆரீஸ் அழுகிய நிலையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் நிர்வாணமாக கிடந்தது. மேலும், உடலில் ஆங்காங்கே தீக்காயம் இருந்தது. வீட்டின் உள்ளே இருந்த நாற்காலியும் உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த மகள் அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர்கள் கதவு, ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்து தொழிலாளியை கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த தக்கலை உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பட்டாணி, சப்–இன்ஸ்பெக்டர் அர்ஜூனன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், மோப்பநாய் ஏஞ்சல் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்பநாய் வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்குள் சென்று படுத்து கொண்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரீஸ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story