பெருந்துறை சிப்காட் அருகே முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வரவேற்பு

சென்னிமலை,
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே ஓடாநிலையில் தீரன் சின்னமலை நினைவுநாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அவருடைய சிலைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முன்னாள் முதல்–அமைச்சரும் அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியின் நிர்வாகியுமான ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்தார். அங்கிருந்து நேற்று காலை ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் வந்து சுங்கச்சாவடி அருகே உள்ள விடுதியில் தங்கியிருந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், மா.பா.பாண்டியராஜன், கே.பி.முனுசாமி, சி.பொன்னையன், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன், செம்மலை எம்.எல்.ஏ ஆகியோரும் அங்கு வந்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் மதிய உணவை முடித்துவிட்டு 2 மணி அளவில் காரில் ஓடாநிலைக்கு புறப்பட்டார்கள். பெருந்துறை சிப்காட் நுழைவு வாயில் அருகே சென்றபோது முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் ஓ.பன்னீர்செல்வம் ஏறி தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.
அதைத்தொடர்ந்து பெருந்துறை, வெள்ளோடு வழியாக ஓடாநிலைக்கு சென்றார். வரவேற்பு நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி, முன்னாள் எம்.பி.க்கள் பி.ஜி.நாராயணன், வி.கே.சின்னச்சாமி, என்.ஆர்.கோவிந்தராஜ், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பூந்துறை பாலு, ஆர்.என்.கிட்டுசாமி, எஸ்.எஸ்.ரமணீதரன், கே.எஸ்.பழனிச்சாமி, அந்தியூர் கிருஷ்ணன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த கே.ஏ.கருப்புசாமி, எம்.ஏ.அன்பழகன், எஸ்.ஆர்.சுப்பிரமணியம், தெய்வசிகாமணி, சோமசுந்தரம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இருந்தும் அவரது அணியை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story