திருவள்ளூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
திருவள்ளூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த பெரியகுப்பம் பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது பெரியகுப்பத்தில் உள்ள ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது
இதையடுத்து போலீசார் அங்கு பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்கள் விற்றதாக பெரியகுப்பம் அம்பேத்கர் நகரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story