சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம்


சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம்
x
தினத்தந்தி 4 Aug 2017 2:30 AM IST (Updated: 3 Aug 2017 11:35 PM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.

வீதிஉலா

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோவில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடித்தபசு திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா கடந்த 27–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் காலை, மாலை என இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் சுவாமி– அம்பாள் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

தேரோட்டம்

7–ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு கோமதி அம்பாள் பூம்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9–ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோமதி அம்பாள் ரதத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா 11–ம் திருநாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story