அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. இருப்பினும் கொள்ளிடம் ஆற்றில் போதுமான தண்ணீர் இல்லாததால் விழா களையிழந்து காணப்பட்டது.
தா.பழூர்,
தமிழர்கள் கொண்டாடப் படும் விழாக்களில் ஆடிப் பெருக்கு முக்கியமானதாகும். விவசாயத்திற்கு உயிர் கொடுத்து பாதுகாத்து வரும் காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக விவசாயிகள் இந்நாளை கொண்டாடுகின்றனர். இது ஒரு புறம் இருக்க, திருமணமான புதுமண தம்பதிகள் தங்களது முதல் ஆண்டில் வரும் ஆடிப்பெருக்கு அன்று காவிரி நீர் பாயும் இடங்களில் குடும்பத்தோடு சென்று புனித நீராடுவதை தொன்று தொட்டு காலம் வரை வழக்கப்படுத்தி உள்ளனர்.
இதையடுத்து அன்றைய தினத்தில் புத்தாடை அணிந்து, அப்பகுதியில் உள்ள ஆற்றங்கரையின் மணலில் அமர்ந்து, மஞ்சளில் விநாயகரின் வடிவத்தை உருவாக்கி, அதற்கு குங்குமத்திலகமிட்டு வழிபடுவர். அதன்பின்னர் வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய் போன்றவற்றை படைத்து காவிரி தாயை பயபக்தியோடு வணங்குவார்கள். பின்னர் திருமண மாலைகளை புதுமண தம்பதிகள் இருவரும் சேர்ந்து காவிரி ஆற்றில் இறங்கி கைகளால் தழுவ விடுவர்.
அதனைத்தொடர்ந்து படைக்கப்பட்ட மஞ்சள் கயிறுகளை புதுமண தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் கட்டிக்கொண்டு ஒற்றுமையாக வாழவேண்டும் என்று உறுதி கொள்வர். இதேபோன்று தாய்மார்களும் தங்களது மாங்கல்யம் நிலைக்க வேண்டும் என்று பக்தியோடு காவிரி தாயை வழிபாடு செய்வார்கள். இந்த நிகழ்வு ஆடி பதினெட்டுவிழாவில் ஆண்டாண்டு காலமாக அரங்கேறி வருகிறது.
இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஆடிப்பெருக்கு விழா அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும். மதனத்தூர், அடிக்காமலை, வாழைக்குறிச்சி பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றில் பொதுமக்கள் திரண்டு இருப்பதால் ஆறுகளில் மக்கள் கூட்டம் களைகட்டி இருக்கும். ஆனால் கடந்த சில வருடங்களாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லை. இந்தாண்டும் அதே நிலை நீடித்ததால் தா.பழூர் ஒன்றிய பொதுமக்கள் கொள்ளிடம் ஆற்று பகுதிகளுக்கு வராமல் அணைக்கரை, கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு பெரும்பாலானோர் சென்று வழி பட்டனர். ஒரு சிலரையே இங்குள்ள கொள்ளிடம் ஆற்றில் பார்க்க முடிந்தது. ஆற்றின் கடைக்கோடி பகுதியில் தேங்கியுள்ள நீர்ப்பகுதிக்கு சென்று ஒரு சில புதுமண தம்பதிகள் வழிபட்டனர். இதனால் கொள்ளிடம் ஆறு வெறிச்சோடி விழா களையிழந்து காணப்பட்டது.
ஆடிப்பெருக்கையொட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர் நிலைகளில் ஏராளமான பொதுமக்கள் நேற்று அதிகாலை முதலே புனித நீராடினர். புதுமண தம்பதிகள் புதுத்தாலி மாற்றிக்கொண்டு புனித நீராடி, வாழை இலையில் பொங்கல், பச்சரிசி, பழங்கள் உள்ளிட்ட பொருள்கள் வைத்து படையலிட்டு வழிபாடு செய்தனர்.
திருமானூரில் உள்ள மகாமாரியம்மன் கோவில், திருமழபாடி வைத்தியநாதசாமி கோவில் உள்ளிட்ட திருமானூர் ஒன்றியங்களில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆடிப் பெருக்கையொட்டி சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருமானூர் பகுதியிலுள்ள கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரின்றி வறண்டு கிடப்பதால் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தண்ணீர் தட்டுப்பாட்டால் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கின் போது இங்கு தண்ணீர் தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக உள்ளதால், இப்பகுதியில் தடுப்பணை கட்டி தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள சு.ஆடுதுறை குற்றம் பொருத்தவர் கோவில் நீவா நதி என புகழ்பெற்ற வெள்ளாற்றின் கரையில் உள்ளது. இந்த கோவில் சப்த துறைகளில் ஒன்றாகும். பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காரியாந்துறை, திருவாலந்துறை, திருமாந்துறை, சு.ஆடுதுறை மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவதிட்டதுறை, திருவட்டத்துறை, பெலாந்துறை உள்ளிட்டவை சப்த துறைகள் எனப்படுகின்றன. இங்குள்ள கோவில்களில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ந் தேதி ஆடிப்பெருக்கு விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இங்கு திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டி சிறப்பு வழிபாடும், திருமணமான பெண்கள் தங்களுடைய தாலி கயிற்றை புதியதாக மாற்றி சடங்குகளை செய்வார்கள்.
பின்னர் தாங்கள் திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டனர். பின்னர் அருகில் உள்ள சு.ஆடுதுறை குற்றம் பொருத்தவர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபாடு நடத்தினர். இதில் திரளான பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story