கோவில்பட்டியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை வீடும் தீப்பிடித்து சேதமடைந்தது


கோவில்பட்டியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை வீடும் தீப்பிடித்து சேதமடைந்தது
x
தினத்தந்தி 4 Aug 2017 2:30 AM IST (Updated: 4 Aug 2017 12:35 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது வீட்டிலும் தீப்பிடித்தது.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது வீட்டிலும் தீப்பிடித்தது.

லாரி டிரைவர்

கோவில்பட்டி புதுகிராமம் செண்பகா நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 63). இவர் தூத்துக்குடி தனியார் நிறுவனத்தில் டேங்கர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி அம்மாள் (61). இவர்களுக்கு முத்துகுமார் (28) என்ற மகனும், மகேசுவரி, சுப்புலட்சுமி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இந்த 3 பேருக்கும் திருமணமாகி விட்டது.

முத்துகுமார் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவர், மனைவியுடன் பெற்றோர் வீட்டிலேயே வசித்து வருகிறார். நேற்று காலையில் செல்வராஜ், முத்துகுமார் ஆகிய 2 பேரும் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர். முத்துகுமாரின் மனைவி ஐசுவர்யா, தன்னுடைய தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.

மூதாட்டி தீக்குளித்தார்

மதியம் வீட்டில் தனியாக இருந்த லட்சுமி அம்மாள் திடீரென்று கதவுகளை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு, தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனால் உடல் கருகி அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் காப்பாற்ற முயன்றனர். ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததால், யாரும் உள்ளே செல்லமுடியாமல் தவித்தனர். மேலும் அவருடைய வீட்டிலும் தீ பரவி எரிந்தது.

தீயில் கருகி சாவு

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி கிழக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கதவை உடைத்து திறந்து, வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர். வீட்டுக்குள் அவர் தீயில் கருகி பிணமாக கிடந்தார். அவருடைய உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story