கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும்
கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆர்.எஸ்.மாத்தூர்,
அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூரில் செந்துறை ஒன்றிய அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநற்கிள்ளி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கொளஞ்சிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அசாவீரன்குடிக்காடு ஊராட்சி செயலாளர் கோடி வரவேற்றார்.
முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது
கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் அய்யாகண்ணு தலைமையிலான போராட்டத்திற்கு இந்த கூட்டம் தனது ஆதரவை தெரிவிக்கிறது. பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு 2014, 15, 16, 17-ம் ஆண்டில் வெட்டிய கரும்புக்கு அரசு தர வேண்டிய நிலுவைத்தொகை ரூ.36 கோடியை உடனே வழங்க வேண்டும்.
இந்த மாத இறுதிக்குள் கரும்பு விவசாயிகளின் பாக்கி தொகையை தமிழக அரசு தரவில்லையானால் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி தாமரைப்பூண்டி கரும்பு கோட்டத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது எனவும், அதே நேரத்தில் அனைத்து கோட்டங்களிலும் முற்றுகை போராட்டம் நடத்துவது எனவும், கரும்பு டன்னுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும்.
ஆலையில் அரசு கொண்டு வந்த இணை மின் திட்டத்தையும், பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு பதியப்படும் கரும்புகளை இந்த ஆலையிலேயே அரைப்பதற்கு உரிய நடவடிக்கையை நிர்வாகம் எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் காங்கிரஸ் மாவட்ட துணை செயலாளர் அமினா கணேசன், அரசு மற்றும் தனியார் ஆலைகளின் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் அன்பழகன், தி.மு.க. மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பாஸ்கர், பா.ம.க. பாட்டாளி விவசாயிகள் சங்க தலைவர் சீனிவாசன், தே.மு.தி.க. செயற்குழு உறுப்பினர் எழிலரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட அணி பொறுப்பாளர் பாலசிங்கம் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் விஸ்வநாதன் தீர்மானங்களை வாசித்து நன்றி கூறினார்.

Related Tags :
Next Story