சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சித்ரதுர்கா கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சித்ரதுர்கா கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 4 Aug 2017 2:00 AM IST (Updated: 4 Aug 2017 1:09 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சித்ரதுர்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

சிக்கமகளூரு,

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சித்ரதுர்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

பாலியல் பலாத்காரம்

சித்ரதுர்கா மாவட்டம் மல்கால மூரு போலீஸ் எல்லைக்குட்பட்ட ஜோகிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் திப்பேசாமி (வயது 20). இவர் கடந்த ஆண்டு (2016) ஜூன் மாதம் 10–ந்தேதி அந்தப்பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி, தனது பெற்றோரிடம் கூறியுள்ளாள். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து மல்கா மூரு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திப்பேசாமியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவர் மீது சித்ரதுர்கா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

10 ஆண்டு சிறை

இந்த வழக்கு கடந்த ஓராண்டாக சித்ரதுர்கா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி வீரண்ணா தீர்ப்பு வழங்கினார். அப்போது, குற்றம்சாட்டப்பட்ட திப்பேசாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையை கட்ட தவறினால், மேலும் ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.


Next Story