ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்றில் மோட்ச தீபம் விடப்பட்டது
பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு மோட்ச தீபம் விடப்பட்டது. அப்போது ஆற்றின் இருகரைகளிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று வழிபட்டனர்.
பரமத்திவேலூர்,
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி காவிரித்தாயை வணங்கும் வகையில் ஆற்றில் மோட்ச தீபம் விடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சி ஆடி 18-ம் நாளான நேற்று மாலை நடந்தது.
முன்னதாக காவிரித்தாயை வணங்கி வழிபடும் வகையிலும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நாடு சுபிட்சம் பெற வேண்டியும் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மோட்ச தீபத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் மேளதாளங்கள் முழங்க மோட்ச தீபம் காவிரி ஆற்றுக்கு எடுத்துச்செல்லப்பட்டன.
இதையடுத்து அந்த தீபத்தை பரிசலில் வைத்து காவிரி ஆற்றின் மையப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு காவிரி ஆற்றில் மோட்ச தீபம் விடப்பட்டது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஆற்றின் இருகரையிலும் திரண்டு நின்று மோட்ச தீபத்தை வழிபட்டனர்.
இந்த நிகழ்ச்சியையொட்டி பாதுகாப்புக்காக பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த நிகழ்ச்சியை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்றும், பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சோழசிராமணி மற்றும் ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியிலும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பக்தர்கள் நீராடி, பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். இதையொட்டி ஜேடர்பாளையம் அண்ணா பூங்காவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில் பரிசல் போட்டி நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு பரிசல் இயக்குவதற்கு போதிய தண்ணீர் காவிரி ஆற்றில் இல்லாததால் பரிசல் போட்டி நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டாவது பரிசல் போட்டி நடத்தப்படுமா? என்று ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த ஆண்டும் போதிய தண்ணீர் வரத்து இல்லாததால் பரிசல் போட்டி நிறுத்தப்பட்டது.

Related Tags :
Next Story