ஆடிப்பெருக்கு விழா: கிருஷ்ணகிரி அணையில் பொதுமக்கள் குவிந்தனர்
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி அணையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். புதுமண தம்பதிகள் தாலி மாற்றி சாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதில் ஆடிப்பெருக்கன்று அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதுடன், நீர் நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடுவது வழக்கம். மேலும் புதுமண தம்பதிகள் நீர்நிலைகளில் கூடி பெண்களுக்கு தாலி மாற்றி சாமியை வழிபடுவது வழக்கம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கிருஷ்ணகிரி அணையில் நேற்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து பொதுமக்களும் என சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அவர்கள் அணையில் உள்ள மார்கண்டேஸ்வரர் கோவில் முன்புறமாக உள்ள நந்தி சிலை வாயில் இருந்து வரக்கூடிய தண்ணீரிலும், ஆற்றிலும் குளித்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் புதுமண தம்பதிகள் தாலி மாற்றி சாமியை வழிபட்ட பின்னர் அணையில் உள்ள பூங்காவை சுற்றி பார்த்தனர். சிறுவர், சிறுமிகள் அங்குள்ள சறுக்கு, ஊஞ்சல் ஆகியவற்றில் விளையாடி மகிழ்ந்தார்கள். மொத்தம் 52 அடி உயரம் உள்ள கிருஷ்ணகிரி அணையில் நேற்றைய நீர்மட்டம் 46.80 அடியாக இருந்தது. பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதற்காக 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பொதுப்பணித்துறை சார்பில் கிருஷ்ணகிரி அணைக்கு வரக்கூடிய பொதுமக்களின் வாகனங்கள் நிறுத்த வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் நுழைவு சீட்டுகள் வழங்கும் பகுதியில் தடுப்பு கம்பிகள் கட்டப்பட்டு இருந்தன. விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி அணை செல்லியம்மன் கோவில் முன்பு பேய் விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, தங்களின் கைகளை மேலே உயர்த்தி கொள்ள பூசாரி, அவர்களின் கைகளில் சாட்டையால் அடித்தார்.
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன், அவதானப்பட்டி மாரியம்மன், பச்சிகானப்பள்ளி மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவின் பேரில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story