அழகர்கோவிலில் ஆடிப்பெருக்கு விழா புனித நீராடி பக்தர்கள் சாமி தரிசனம்


அழகர்கோவிலில் ஆடிப்பெருக்கு விழா புனித நீராடி பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 4 Aug 2017 4:15 AM IST (Updated: 4 Aug 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

அழகர்கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி புனித நீராடி பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.

அழகர்கோவில்,

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆடி பதினெட்டாம் பெருக்கையொட்டி காலையில் இருந்து மாலை வரை பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. அழகர்மலை உச்சியில் உள்ள நூபுரகங்கை தீர்த்த தொட்டியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி அங்குள்ள ராக்காயி அம்மனை தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத சுந்தரராஜபெருமாள் என்ற கள்ளழகருக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

கோவிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலில் பக்தர்கள் சந்தனம், சாத்துபடி செய்து நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஆடி பெருந்திருவிழாவையொட்டி பல்லக்கில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி வலம்வந்து மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் மாலையில் சாமி இருப்பிடம் சேர்ந்தார். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். 

Related Tags :
Next Story