கோவில் திருவிழாவின்போது நள்ளிரவில் ஆயுதங்களுடன் திரிந்த மர்ம கும்பல் 2 பேர் கைது
தேவகோட்டையில் நடைபெற்ற கோவில் திருவிழாவின்போது நள்ளிரவில் ஆயுதங்களுடன் திரிந்த மர்ம கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேவகோட்டை,
தேவகோட்டை அருணகிரிப்பட்டினம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் கோவிலில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து அருகில் உள்ள கோவில் ஊருணிக்கு கொண்டு சென்றனர். இந்த விழா நடைபெற்றபோது 10 பேர்கள் கொண்ட மர்மகும்பல் ஒன்று தங்களது கையில் வீச்சரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களோடு அங்கு வந்ததாக கூறப்படுகிறது.
இதைப்பார்த்து அதிர்ச்சி யடைந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து மர்ம கும்பலை சேர்ந்த 2 பேர் கையில் இருந்த அரிவாள் மற்றும் ஆயுதங்களை ஒரு மறைவான இடத்தில் மறைத்து வைத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். மேலும் இந்த கோவிலில் ஏற்கனவே சாமி கும்பிடுவதில் இரு பிரிவினரிடையே தகராறு இருந்து வந்தது. இதில் ஒரு பிரிவினர் தங்களை தான் அந்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் தாக்க வந்ததாக குற்றம் சாட்டி கோவில் அருகே உள்ள போஸ் என்பவரின் வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் போஸ் என்வரின் வீட்டில் மறைந்துள்ளதாக புகார் கூறினர்.
இது குறித்து தகவல் அறிந்த தேவகோட்டை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் உள்பட போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
அதன்பின் 2மணி நேரமாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் சார்பில் ஜெகதீஸ்வரன்(வயது24) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தேவகோட்டையைச் சேர்ந்த பாபு, விக்கி, சதீஷ், ராமநாதன், சங்கர், தினேஷ்பாபு, சிவசங்கர பாண்டியன், காசிவிஸ்வநாதன் ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர் மற்றும் காசிவிஸ்வநாதன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

Related Tags :
Next Story