லாரி சக்கரத்தில் சிக்கி 10–ம் வகுப்பு மாணவர் பலி பிவண்டியில் பரிதாபம்
பிவண்டியில் லாரி சக்கரத்தில் சிக்கி 10–ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
தானே,
பிவண்டியில் லாரி சக்கரத்தில் சிக்கி 10–ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
லாரி ஏறி இறங்கியதுதானே மாவட்டம் பிண்டியை சேர்ந்தவர் தீரஜ்(வயது15). அங்குள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் டியூசன் வகுப்புக்கு சென்றார். இவர்கள் பிவண்டி– கல்யாண் ரோட்டில் உள்ள பஜாஜ் ஷோரூம் அருகே சென்ற போது சாலை குண்டு, குழியுமாக இருந்தது. எனவே தீரஜின் நண்பர் மோட்டார் சைக்கிளின் வேகத்தை குறைத்தார். அப்போது பின்னால் வந்த லாரி இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தீரஜும் அவரது நண்பரும் தூக்கி வீசப்பட்டனர்.
அப்போது தீரஜ் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவரது உடல் நசுங்கியது. தீரஜின் நண்பருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
மாணவன் பலி2 பேரும் இந்திரா காந்தி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீரஜை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறினர். அவரது நண்பருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த சாந்திநகர் போலீசார் பிவண்டியை சேர்ந்த லாரி டிரைவர் அமர்நாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.