குலதெய்வத்தை வழிபட மாட்டு வண்டியில் பயணம் செய்யும் கிராம மக்கள்
காரைக்குடி அருகே பழமை மாறாமல் குல தெய்வத்தை வழிபட மாட்டு வண்டியில் கிராம மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
திருப்பத்தூர்,
காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர், வேலங்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 18 கிராமத்தைச் சேர்ந்த நாட்டார்களின் உறவின் முறையாளர்கள், பங்காளிகள் ஆகியோர் தலைமுறை தலைமுறையாக மாட்டு வண்டியில் மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள தங்களது குலதெய்வத்தை வழிபட மாட்டு வண்டியில் பயணிப்பதை இன்றுவரை கடைபிடித்து வருகின்றனர்.
இந்தாண்டிற்கான இந்த பயணம் வேலங்குடி பிள்ளையார்கூடத்தில் இருந்து தொடங்கியது. இவர்கள் 18 வண்டிகளில் மாடுகளை பூட்டி தங்களது குல தெய்வ வழிபாடு பயணத்தை தொடங்கினர். இவர்கள் வேலங்குடியிலிருந்து குன்றக்குடி வழியாக திருப்பத்தூர் சென்றனர். அதன் பின் திருப்பத்தூர் அருகே உள்ள எஸ்.எஸ்.கோட்டையில் தங்கி விட்டு மீண்டும் புறப்பட்டு சென்று மேலூரில் தங்கினர். இன்று (சனிக் கிழமை) அழகர்கோவிலை சென்றடைந்து தீர்த்தமாடுதல் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். நாளை (ஞாயிற்றுக் கிழமை) தங்களது நேர்த்திக் கடனான கிடாவெட்டு நிகழ்ச்சி நடத்தியபின் அனைவருக்கும் அன்னதானம் வழங்கிவிட்டு மீண்டும் அதே மாட்டு வண்டியில் தங்களது சொந்த கிராமத்திற்கு வந்தடைகின்றனர்.
தற்போது வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சி மற்றும் போக்குவரத்து துறையில் எவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் இன்றளவும் பழமை மாறாமல் குல தெய்வத்தை வழிபட பாரம்பரியமாக இருந்து வரும் தங்களின் முன்னோரிகளின் மாட்டுவண்டி பயணத்தை இந்த கிராமத்தினர் கடைபிடித்து வருகின்றனர். மேலும் இது கடவுளுக்கு செய்யும் கடமை மற்றும் அவர்களின் முன்னோர்களுக்கு செய்யும் மரியாதையாகவும் அவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
இந்த மாட்டு வண்டியில் குலதெய்வத்தை வழிபட சென்ற ஆசிரியர் செந்தில் என்பவர் கூறியதாவது:- எங்களது முன்னோர்கள் காலத்தில் இருந்தே மாட்டு வண்டியில் பயணம் மூலம் அழகர்கோவில் சென்று குலதெய்வ வழிபாடு செய்து வந்தனர். இந்த பயணத்திற்காக தனியாக மாட்டு வண்டிகள் தயார் படுத்தி வைத்திருந்தனர். விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இந்த மாட்டை இந்த வண்டியில் பூட்டி பயணம் செய்வதை தெய்வத்திற்கு சமமாக கருதுகிறோம். நாங்கள் செல்லும் இடங்களில் இரவு நேரத்தில் தங்கி , சாப்பிட்டு குலதெய்வத்தை வழிபடுவதை எங்களின் இனிமையான நினைவுகளாக கருதுகிறோம். இந்த பயணத்தின் போது எந்த ஒரு சுக துக்க நிகழ்ச்சி நடந்தாலும் நாங்கள் எங்களது இந்த பயணத்தை கைவிடுவதில்லை.
எங்களது இந்த குலதெய்வ பயணம் வருடந்தோறும் ஆடிமாதம் நடைபெறும். ஆடி மாதம் திருவிழா தொடங்கியதும் அழகர்கோவிலில் இருந்து எங்களுக்கு திருஓலை அனுப்பப்படும். அதனைத் தொடர்ந்து இந்த பயணத்தை நாங்கள் மேற்கொள்வோம். தொடர்ந்து 7 நாட்கள் எங்களது இந்த பயணம் தொடரும்.
எங்களது வீட்டில் பிறக்கும் முதல் குழந்தைக்கு இங்கு தான் முடி காணிக்கை செலுத்துவோம். எங்கள் கிராமத்து மக்கள் வெளிநாட்டில் வேலை செய்தாலும் வருடந்தோறும் இந்த பயணத்தில் அவர்கள் கலந்துகொள்வார்கள். இந்த பயணத்தினால் எங்களது உறவுகள் பலப்படவும், நேர்த்திக்கடன் நிவர்த்தி செய்யவும் நல்ல வாய்ப்பாக அமைந்து வருகிறது. இந்த மாட்டு வண்டி பயணத்தை இனி வரும் சந்ததியினரும் கடைபிடிப்பார்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story