தூத்துக்குடி பண்ணை பசுமை கடையில் தமிழ்நாட்டிலேயே அதிக காய்கறிகள் விற்பனை
தூத்துக்குடி பண்ணை பசுமை காய்கறி கடையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று திடீர் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி பண்ணை பசுமை காய்கறி கடையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று திடீர் ஆய்வு செய்தார்.
அமைச்சர் ஆய்வுதூத்துக்குடி மாவட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் பண்ணை பசுமை காய்கறி கடை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கடையை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று காலை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, கடைக்கு வந்த பொதுமக்களிடம் காய்கறிகள் குறைவான விலையில் கிடைக்கிறதா? தரமான காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து கேட்டு அறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
ரூ.75¼ கோடிக்கு விற்பனைதமிழ்நாட்டில் பண்ணை பசுமை காய்கறி கடைகள் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 72 கடைகளும், நகரும் 2 கடைகளும் இயங்கி வருகின்றன. 26 ஆயிரத்து 500 டன் காய்கறிகள் ரூ.75 கோடியே 32 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக இடைத்தரகர்கள் இல்லாமல் காய்கறிகள் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் காய்கறிகள் குளிரூட்டப்பட்ட வேன்கள் மூலம் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குறைந்த விலையில் மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தூத்துக்குடியில் அதிக விற்பனைதூத்துக்குடியில் உள்ள கடையில் தினமும் ரூ.1½ லட்சம் வரை காய்கறி விற்பனை நடக்கிறது. தமிழ்நாட்டிலேயே அதிக விற்பனை செய்யும் கடையாக உள்ளது. மக்கள் இங்கு அதிக ஆர்வமாக வந்து வாங்கி செல்கின்றனர். இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. கூட்டுறவு மற்றும் தோட்டக்கலைத்துறை இணைந்து வட்டார அளவிலும் பண்ணை பசுமை காய்கறி கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்ஆய்வின் போது, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ராஜகோபால், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார், துணைப்பதிவாளர் சிவகாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.