தூத்துக்குடியில், பெண் தகராறில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை
தூத்துக்குடியில், பெண் தகராறில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில், பெண் தகராறில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சரமாரி வெட்டிக்கொலைதூத்துக்குடி 3 செண்ட் அந்தோணியார்புரத்தை சேர்ந்தவர் பாண்டியராஜ். இவருடைய மகன் டெய்சி அமிர்தராஜ்(வயது 29). விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய நிர்வாகியாக பொறுப்பு வகித்து வந்த இவர் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் தற்காலிக உதவியாளராகவும் பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று மாலை தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் டெய்சி அமிர்தராஜை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பெண் தகராறுபோலீசார் நடத்திய தீவிர விசாரணையில் டெய்சி அமிர்தராஜ், அவரது உறவினர் சக்கரவர்த்தி என்பவரின் உறவுக்கார பெண்ணை விரும்பியதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாக அவரை, அதே பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி, ராஜா, முத்து ஆகியோர் சேர்ந்து கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த கொலை தொடர்பாக தென்பாகம் போலீசார், முத்து என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.