நர்சுகளை வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை, போலி மருத்துவமனை மூடப்பட்டது, உரிமையாளர் உள்பட 4 பேர் கைது
கருமத்தம்பட்டியில் டாக்டர்கள் இல்லாமல் நர்சுகளை வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போலி மருத்துவமனை மூடப்பட்டது. மருத்துவமனை உரிமையாளர், நர்சுகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கருமத்தம்பட்டி,
கோவை மாவட்டத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால், அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்றும் பார்வையிட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் கருமத்தம்பட்டியில் முகவை என்ற பெயரில் செயல்பட்ட தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு, டாக்டர்களை போல் நர்சுகளே சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது. இந்த புகாரின்பேரில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் சந்திரசேகரன், சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.
அப்போது அந்த மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அந்த நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான கோப்பில் டாக்டரின் கையெழுத்து இல்லாமல் இருந்தது. சில கோப்புகளில் டாக்டர்களின் பெயர் மட்டும் இடம்பெற்று இருந்தது. தங்களது மருத்துவமனைக்கு குறிப்பிட்ட டாக்டர்கள் வந்து சிகிச்சை அளிப்பதாக மருத்துவமனை நிர்வாகி காசிலிங்கம் தெரிவித்தார். ஆனால் அந்த டாக்டர்களிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை என்று தெரிவித்தனர்.
மருத்துவமனை நிர்வாகி காசிலிங்கம், மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப படிப்பு மட்டும் படித்து முடித்துவிட்டு மருத்துவமனையை நடத்தியதும் தெரியவந்தது. அங்கு பணியாற்றிய நர்சுகளே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து உள்ளனர். இதைத்தொடர்ந்து முகவை மருத்துவமனையை மூட சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அங்கு தங்கி இருந்த நோயாளிகளையும் வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுமாறு ஆலோசனை வழங்கி அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து அந்த மருத்துவமனை மூடப்பட்டது.
இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். அவர்கள் விவரம் வருமாறு:-
1. காசிலிங்கம்(வயது 40), கடலாடி, ராமநாதபுரம், இவர் மருத்துவமனை உரிமையாளர். ஆய்வக தொழில்நுட்ப படிப்பு மட்டும் படித்துவிட்டு மருத்துவமனை நடத்தி வந்தவர். 2.நிஜந்தன்(24), நெசவாளர் காலனி, ஒண்டிப்புதூர், மருத்துவ தொழில்நுட்ப உதவியாளர், 3. தவமணி(26), நிலக்கோட்டை, திண்டுக்கல், நர்சு. 4. செல்லம்மாள்(23), திண்டுக்கல். நர்சு.
போலி மருத்துவமனை வெளிச்சத்துக்கு வந்த சம்பவம் கருமத்தம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

Related Tags :
Next Story