கல்பாக்கம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
கல்பாக்கம் அருகே மழைக்காக சப்பரத்தின் கீழே ஒதுங்கியபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கல்பாக்கம்,
காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த சூராடிமங்கலத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு, அருகில் உள்ள அங்கம்மாபட்டு பகுதியில் உள்ள செல்லியம்மன் கோவிலில் நடந்த கலைநிகழ்ச்சியை பார்க்க சென்றார்.
திடீரென அங்கு மழை பெய்ததால் சாமி திருவீதி உலா செல்வதற்காக அலங்கரித்து வைக்கப்பட்ட சப்பரத்தின் கீழே அவர் ஒதுங்கினார்.
சாவு
அப்போது சப்பரத்தில் உள்ள மின்வயரில் அவரது கை பட்டது. இதில் மின்சாரம் தாக்கி முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து சதுரங்கப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story