மெரினா கடலில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்


மெரினா கடலில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 5 Aug 2017 4:30 AM IST (Updated: 5 Aug 2017 2:02 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மெரினா கடலில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

சென்னை,

சென்னை பொழிச்சலூர் பகுதியை சேர்ந்தவர் தனசேகர். இவருடைய மகன் அசோக்குமார் (வயது 18). இவர் பொழிச்சலூர் அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது கல்லூரி நண்பர்கள் 8 பேருடன் அசோக்குமார் மெரினா கடற்கரைக்கு வந்தார்.

அங்கு உழைப்பாளர் சிலை பின்புறம் உள்ள கடலில் நண்பர்களுடன் அவர் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த ராட்சத அலை அசோக்குமாரை கடலுக்குள் இழுத்து சென்றது.

மீனவர்கள் உதவியுடன்...

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் அருகில் இருந்த மீனவர்கள் உதவியுடன் கடலில் மூழ்கிய அசோக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அசோக்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story