அகினேஸ்புரம் வனத்து சின்னப்பர் ஆலய தேர்பவனி திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்


அகினேஸ்புரம் வனத்து சின்னப்பர் ஆலய தேர்பவனி திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 5 Aug 2017 4:00 AM IST (Updated: 5 Aug 2017 3:02 AM IST)
t-max-icont-min-icon

அகினேஸ்புரம் கிராமத்தில் உள்ள வனத்து சின்னப்பர் ஆலய தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்துள்ள அகினேஸ்புரம் கிராமத்தில் வனத்து சின்னப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் தேர் பவனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான தேர்பவனி திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து கும்பகோணம் தூய இருதய இளங்குருமடம் அதிபர் சூசை மாணிக்கம் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து தூய வனத்து சின்னப்பரின் துறவர வாழ்வு குறித்து மறையுரை கருத்துகள் வழங்கப்பட்டன.

திருவிழாவில், நேற்று முன்தினம் மறைமாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி தலைமையில் கூட்டு திருப் பலி நடைபெற்றது. இதனை யடுத்து வரதராஜன்பேட்டை சலேத்மாதா திருத்தல உதவி அதிபர் ராஜமாணிக்கம் தூய வனத்து சின்னப்பரின் இறைபக்தி குறித்து மறையுரை கருத்து வழங்கினார்.

அதனை தொடர்ந்து இரவு 10 மணியளவில் வண்ண மின் விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முதல் பெரிய தேரில் வனத்து சின்னப்பரும், இரண்டாவது தேரில் புனித அந்தோணியாரும், மூன்றாவது தேரில் அன்னை மரியாள் சொரூபங்கள் வைக்கப்பட்டு ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து நேற்று காலை பெருவிழா திருப்பலி நடைபெற்று, தூய வனத்து சின்னப்பரின் இறை அச்சம், மறையுரை கருத்து வழங்கப்பட்டு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுபெற்றது. இதில் பங்கு தந்தை ஜெஸ்டின் பிரதாப் மற்றும் பாதிரியார்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், அகினேஸ்புரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story