மர்மமான முறையில் இறந்த மாணவிகளின் உடல்கள், பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு
வையம்பட்டி அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த 2 மாணவிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர், மாணவ-மாணவிகளிடம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வையம்பட்டி,
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள சரளப்பட்டியை சேர்ந்த ஆறுமுகத்தின் மகள் ரதிதேவி (வயது 15), வைரம்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமியின் மகள் செல்வி(15). இவர்கள் 2 பேரும் ஆர்.எஸ். வையம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். தோழிகளான இருவரும் கடந்த புதன்கிழமை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றனர். ஆனால் மாலை அவர்கள் வீட்டுக்கு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வையம்பட்டி அருகே உள்ள இடைக்காட்டனூர் என்ற ஊரின் பின்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தின் அருகே ரதிதேவியும், செல்வியும் பள்ளி சீருடையில் பிணமாக கிடந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவிகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். முன்னதாக அங்கு வந்த பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல் ஒரு மாணவியின் புத்தகப்பையில், மாணவிகள் எழுதி வைத்திருந்த கடிதத்தை எடுத்து சென்றதாக பொதுமக்கள் கூறினர். சம்பவ இடத்துக்கு சென்ற திருச்சி ரெயில்வே போலீசார் 2 மாணவிகளின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், மாணவிகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி வையம்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டும், திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர். இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாணவியின் புத்தகப்பையில் இருந்த கடிதம் தொடர்பாக, 3 மாணவர்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் தங்கவேலை ரெயில்வே போலீசார் அழைத்து சென்றனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இறந்த மாணவிகளின் தோழிகளிடமும் நேற்று காலை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று மாலை திருச்சி அரசு மருத்துவமனையில் மாணவிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு மாணவிகளின் உடல்களும் தனித்தனி ஆம்புலன்சுகள் மூலம் அவரவர் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கை வந்த பிறகு தான் மாணவிகள் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவரும் என்று ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.
நேற்று மாணவிகள் உடல் பிரேத பரிசோதனை செய்து அவர்களது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதையொட்டி நேற்று பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.

Related Tags :
Next Story