எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சத்துணவு பொறுப்பாளர்கள், அங்கன்வாடி மைய பணியாளர்கள் பேரணி
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சத்துணவு பொறுப்பாளர்கள், அங்கன்வாடி மைய பணியாளர்கள் பேரணியாக சென்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகியவை சார்பில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் நேற்று மாலை பேரணி நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணிக்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சக்கரபாணி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) பிருந்தாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் தொடங்கி வைத்தார்
நிகழ்ச்சியில் தமிழக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் மாவட்டத்தில் உள்ள 22 ஒன்றியங்களில் இருந்தும் சத்துணவு பொறுப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், அங்கன்வாடி மைய பணியாளர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சத்துணவு திட்டம் கொண்டு வந்த எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பேரணியாக சென்றனர். இந்த பேரணி விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ரெயில் நிலையத்தில் முடிவடைந்தது.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், உதவி கலெக்டர் (பயிற்சி) சிம்டன்ஜீத் சிங் கஹ்லான், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அனுசுயாதேவி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசேகரன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பேட்டை முருகன், வேலு, முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, முன்னாள் நகரமன்ற கவுன்சிலர்கள் ராமதாஸ், வக்கீல் செந்தில் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story