டிரைவரிடம் நகை, பணம் பறித்தவர் கைது 9 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு


டிரைவரிடம் நகை, பணம் பறித்தவர் கைது 9 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு
x
தினத்தந்தி 5 Aug 2017 4:30 AM IST (Updated: 5 Aug 2017 4:00 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் குமுதேப்பள்ளியில் வேன் டிரைவரிடம் நகை, பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.

ஓசூர்,

ஓசூர் டவுன், அட்கோ போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. இது குறித்து விசாரணை நடத்த ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் போலீசாருக்கு உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின் பேரில் அட்கோ போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் ஓசூர் தொரப்பள்ளி காந்தி நகரைச் சேர்ந்த வேன் டிரைவர் கோபி (வயது 31) குமுதேப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு நபர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.720 ஆகியவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இது குறித்து கோபி அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள தாளபுதூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (34) என்பவர் வேன் டிரைவர் கோபியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணத்தை பறித்து சென்றதும் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, ஓசூர் அட்கோ, டவுன் பகுதியில் 9 மோட்டார் சைக்கிள்களை திருடி பிரபல திருடன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து திருடப்பட்ட 9 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் மீட்டனர். கைதான தமிழ்ச்செல்வன் மீது வேறு எதுவும் வழக்குகள் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story