கொசு உற்பத்தி கண்டுபிடிப்பு: ரெயில்வே, பொதுப்பணித்துறைக்கு நோட்டீஸ்


கொசு உற்பத்தி கண்டுபிடிப்பு: ரெயில்வே, பொதுப்பணித்துறைக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 5 Aug 2017 4:21 AM IST (Updated: 5 Aug 2017 4:21 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களில் நோய் பரப்பும் கொசு உற்பத்தியாவது கண்டறியப்பட்டதை அடுத்து மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.

மும்பை,

ரெயில்வே மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களில் நோய் பரப்பும் கொசு உற்பத்தியாவது கண்டறியப்பட்டதை அடுத்து மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.

மழைக்கால நோய்கள்

மும்பையில் மழைக்கால நோய்களால் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா காய்ச்சலாலும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள் கொசு உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கையாக குடியிருப்பு கட்டிடங்கள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அண்மையில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் மாலிஷ்கா வீட்டில் நோய் பரப்பும் கொசு உற்பத்தியாவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.

நோட்டீஸ்

இந்தநிலையில், மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில், லோயர்பரேலில் உள்ள ரெயில்வே பணிமனையிலும், பொதுப்பணித்துறையின் ஒர்லி மற்றும் லோயர் பரேலில் உள்ள பி.டி.டி. சால் பகுதிகளிலும் நோய் பரப்பும் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாவது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக ரெயில்வே, பொதுப்பணித்துறைக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அதில், மேற்கண்ட இடங்களில் தேங்கி கிடக்கும் பழைய பொருட்களை உடனடியாக அகற்றும்படியும், தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Next Story