2 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு; சைக்கிள்களும் நாசம் உறவினர் கைது
வில்லுக்குறியில் வியாபாரியின் வீடு புகுந்து 2 மோட்டார் சைக்கிள்கள், 3 சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதுதொடர்பாக உறவினர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
அழகியமண்டபம்,
வில்லுக்குறி மாடத்தட்டுவிளையை சேர்ந்தவர் மார்ட்டின் (வயது 39). இவர் வில்லுக்குறி சந்திப்பில் சொந்தமாக செருப்பு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்பு கடையை பூட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை வீட்டையொட்டி நிறுத்தி இருந்தார். அந்த இடத்தில் இவரது ஒரு பழைய மோட்டார் சைக்கிளும், குழந்தைகளின் 3 சைக்கிள்களும் நிறுத்தப்பட்டிருந்தன.
நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென மார்ட்டினின் வீட்டுக்கு வெளியே சத்தம் கேட்டது. உடனே அவர் கண்விழித்து வெளியே ஓடி வந்தார். அங்கே அவரது 2 மோட்டார் சைக்கிள்களும், 3 சைக்கிள்களும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தன. அதிர்ச்சி அடைந்த அவர் தீயை அணைக்க முயன்றார். ஆனால், முடியவில்லை.
இது பற்றி தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் மார்ட்டினின் 2 மோட்டார் சைக்கிள்கள், குழந்தைகளின் 3 சைக்கிள்கள் என மொத்தம் 5 வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து நாசமாயின.
மேலும் மார்ட்டின் வீட்டில் இருந்த மின் மீட்டரும் எரிந்து சேதமானது. இவரது வீட்டின் அருகே செல்போன் கோபுரம் உள்ளது. சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து மார்ட்டின், இரணியல் போலீசிலும் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி இருந்த இடத்தின் அருகே பெட்ரோல் கேன் கிடந்தது. எனவே, மோட்டார் சைக்கிள்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்திய போது கருங்கல் மாங்கரையை சேர்ந்த உறவினர் சுனில் (40) முன்விரோதம் காரணமாக இந்த செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனிலை கைது செய்தனர். கைதான சுனில், மார்ட்டின் மனைவியின் தங்கை கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story